By February 8, 20180 CommentsReport

அட்வைஸ் செய்யும் காஜல்..!!

‘சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர், நடிகைகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

2008ஆம் ஆண்டு பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ்த் திரையுலகில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காஜல் தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிகளவிலான ரசிகர்களைக் கொண்டவர். கடந்த வருடம் விஜய்யுடன் மெர்சல், அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் வெளியாகிப் பரபரப்பாக ஓடிய குயின் படத்தின் தமிழ்ப் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்திலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் காஜல். “வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும். அந்தக் கனவு நனவாகக் கடுமையாக உழைக்க வேண்டும். நான் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன். அதனால் அது நிறைவேறியது. சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் எனக்கென்று ஒரு இடம் இங்கு இருக்கிறது என்றால் அதற்கு எனது உழைப்புதான் காரணம். உழைப்பும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். சில நேரங்களில் நடிகர்-நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு கஷ்டப்பட்டு நடித்த படங்கள் தோல்வியடைந்துவிடும். அதற்கான காரணம் புரியாமல் குழப்பம் வரும். அப்போது யாரும் நிராசை அடையக் கூடாது. அதிலிருந்து மீண்டு வந்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும். படங்களின் வெற்றி, தோல்வி முடிவுகள் நமது கையில் இல்லை. எனவே படங்கள் தோல்வியடைந்தால் கவலைப்படக் கூடாது. வெற்றி, தோல்வியைச் சமமாக எடுத்து முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நாம் செய்கிற தொழில்தான் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். முடிவுகளைத் தலைவிதி முடிவு செய்யும். லட்சியம் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற உழைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மேலும், “நமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறையப் பேர் வருவார்கள். நம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம். அவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. எனவே எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்கிறேன். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர், நடிகைகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*