By February 9, 20180 CommentsReport

ஆச்சரியக் கூட்டணியில் அதிதி மேனன்..!!

தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் பூஜை சென்னையில் நேற்று (பிப்ரவரி 7) நடைபெற்றது.

ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மணிவாசகம். பின்னர் மணிவாசகம் மறைவுக்குப் பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தைத் தயாரித்து, இயக்குகிறார் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம்.

காதல் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்க, அதிதி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி 2 படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 7) சென்னையில் நடந்தது. இதில் தினேஷ், அதிதி மேனன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேவயானி, ரேணுகா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பை வரும் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*