சூர்யாவுடன் முதன்முறையாக ஜி.வி..!!
சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்த செல்வராகவனுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்தப் படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்திலும், ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதையடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.