படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த வித்யூத் ஜாம்வால்..!!
பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜாம்வால். இவர் விஜய் நடித்துள்ள துப்பாக்கி, அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜங்கிளி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
இந்த படத்துக்கான சண்டை காட்சியொன்றை படமாக்கினர். வித்யூத் ஜாம்வால் ஜன்னல் வழியாக வெளியே குதிப்பதுபோன்று அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அவரது உடலில் கயிறு கட்டி பாதுகாப்பாக குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் வெளியே குதிக்கும்போது எதிர்பாராதவிதமாக தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.