By February 12, 20180 CommentsReport

கமலின் நாளை நமதே இணையதளம்..!!

வரும் 21ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் நாளை நமதே என்று பெயரில் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், வரும் 21ஆம் தேதி தான் பிறந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தன்னுடைய மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். அங்கு கட்சிக் கொடியும் சின்னமும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பொதுக்கூட்டமும் அன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே மையம் விசில் என்ற பெயரில் செயலி தொடங்கியிருந்த கமல், தற்போது ரஜினிகாந்த் பாணியில் நாளை நமதே மையம்.காம் என்ற பெயரில் இணையதளமும் துவங்கியுள்ளார். கமல்ஹாசன் ரசிகர்களும், இயக்கத்தில் இணைவதற்கு விருப்பமுள்ளவர்களும் இந்த இணையதளத்தில் சென்று தங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ”கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழ்நாடு உங்களிடம் இருந்து துவங்குகிறது, அனைவரும் கூடித் தேரை இழுத்தால் நாளை நமதே” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையப் பக்கத்தின் இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய கமல்ஹாசன், தனது நோக்கமும் ரஜினிகாந்த் நோக்கமும் ஒன்றாக இருந்தாலும் பாதை தனித்தனியானது என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*