By February 12, 20180 CommentsReport

இரு மொழிகளில் பிஸியான மேகா..!!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்திவரும் நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கு நடிகர் நிதினின் புதிய படத்தில் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மேகா, அந்தப் படத்தையடுத்து தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெளிவருவதில் தாமதமாகவே தெலுங்கில் ‘லை’ படத்தில் நடித்து பரவலாகக் கவனம் பெற்றார்.

தற்போது மேகா நடித்துள்ள இரண்டு தமிழ்ப் படங்களும் வெளிவரவிருக்கிறது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகிலும் தெலுங்குத் திரையுலகிலும் நடிக்க ஆர்வம்காட்டுகிறார். அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் மேகா, அடுத்ததாகத் தெலுங்கு நடிகர் நிதினின் 25ஆவது படமாக உருவாகவிருக்கும் சால் மோகனரங்கா படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிகே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் பிஸியாக நடித்துவரும் மேகா ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது பிஸியாகியிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*