By February 12, 20180 CommentsReport

இயக்குநருடன் தமன்னா மோதல்?..!!

தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படி காட்சிகளை மாற்றச் சொல்லி இயக்குநருடன் தகராறு செய்ததாக வந்த செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா .

பாகுபலி படத்துக்குப் பிறகு நடிகை தமன்னாவுக்கு மார்க்கெட் உயர்ந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீப காலமாகக் கதையில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி இயக்குநர்களை அவர் நிர்பந்திப்பதாகவும் இதனால் இயக்குநர்களுக்கும், தமன்னாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

தமன்னா தற்போது கல்யாண் ராமுடன் இணைந்து தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படி காட்சிகளை மாற்றச் சொல்லி இயக்குநருடன் தகராறு செய்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து sify இணையதள பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் கதையில் தலையிடுவதாக வதந்தி பரவி இருக்கிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. கதையும், திரைக்கதையும் முழுக்க இயக்குநரின் சொந்த கற்பனை. அதில் தலையிட்டு மாற்றும்படி சொல்வது தவறு என்பது எனக்குத் தெரியும். படப்பிடிப்பில் இயக்குநர் என்ன சொல்லி கொடுக்கிறாரோ அதன்படி நடித்துக் கொடுக்கிறேன். எப்போதும் நான் கதை விவகாரம், டிஸ்கஷனில் தலையிட்டதே கிடையாது. கதை சரியில்லை. எனது கதாபாத்திரம் சரி இல்லை என்று எப்போதுமே நான் கருத்து சொன்னது இல்லை. கதையில் எந்த உரிமையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கிறது. ஒருவரிடத்தில் இருக்கும் திறமை இன்னொருவரிடம் இருக்காது. எனவே எல்லோருடைய திறமைகளையும் மதிக்க வேண்டும். யாருடனும் யாரையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. மற்றவர்கள் விஷயங்களிலும் தலையிடக் கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே எல்லாம் சிறப்பாக நடக்கும். சினிமா என்பது கூட்டு முயற்சி” என்றும் தமன்னா விளக்கமளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*