By February 12, 20180 CommentsReport

காலா: அடையாளத்தை மாற்றிய கருத்தியல்..!!

காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலாவின் தீ பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தனுஷ். அதனால்தான் பலவிதத்தில் எதிர்பார்ப்பை எகிறவைத்து, கடைசியில் நேற்று இரவு 7 மணிக்கு வெளியிட்டார்.

ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அறிவித்ததுதான் தாமதம், எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை. இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்தது.

ரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் ஒலித்தது. மூன்று படங்கள் மட்டுமே எடுத்திருக்கும் இயக்குநர் என்ற சினிமாவின் மார்க்கெட் வேல்யூக்களை மாற்றி, இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலைப் பேசும் இயக்குநர் என்பதால் ரஞ்சித்துக்கு இந்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அதிலும், ‘நான் இப்போது செய்துகொண்டிருப்பதே நேரடி அரசியல்தான்’ என்றும், இசையில் ஏன் இருக்கிறது சாதி என்று அவர் நடத்திக்காட்டிய Casteless Collective ஆகியவை வெகுவாகவே அவரது மதிப்பை தமிழ் மக்களிடையே உயர்த்தியிருக்கிறது. ரஜினி என்ற உலகின் மிகப்பெரிய பிம்பத்தைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது அத்தனை எளிதில் ஒதுக்கக்கூடியது அல்ல.


Post a Comment

CAPTCHA
Refresh

*