By February 12, 20180 CommentsReport

பிரபு படத் தலைப்பில் விமல்..!!

விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகிவரும் ‘காதல் மன்னன்’ படத்தின் தலைப்பு ‘கன்னி ராசி’யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கத்தில் விமல் நடித்துவரும் படத்துக்கு முதலில் ‘காதல் மன்னன்’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

அஜித், மானு நடிப்பில் 1998ஆம் ஆண்டு வெளியான ‘காதல் மன்னன்’ படத்தின் தலைப்பை இந்தப் படத்துக்கு முதலில் வைத்திருந்தனர். அந்தத் தலைப்பின் உரிமை கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. தற்போது படத்தின் தலைப்பை ‘கன்னி ராசி’ என மாற்றம் செய்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதே ‘கன்னி ராசி’ என்ற தலைப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபுவும் ரேவதியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*