By February 15, 20180 CommentsReport

கௌதம் மேனன் இல்லாத காதலர் தினமா?..!!

பல காதல்களுக்கு தன் திரைப்படங்கள் மூலம் ஐடியா கொடுத்தவர் கௌதம் மேனன். 2018ஆம் வருட காதலர் தினம் அவரது தாக்கம் இல்லாமல் அரங்கேறுமோ? ‘உலவிரவு’ என்ற பாடலை அவரது ‘ஒன்றாக’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் உயிரே ‘உலவிரவு’ என்ற சொல் தான். ஆங்கிலத்தில் Date Night எனப்படுகிறது இது. காதல் உறவில் இருக்கும் இருவர், இரவு முழுவதும் சுற்றித்திரிந்து மகிழ்ந்துகிடக்கும் சூழலே Date Night எனப்படுகிறது. இதை ‘உலவிரவு’ என்று தமிழாக்கம் செய்திருப்பது யார் என்ற சந்தேகமே வேண்டாம். பல ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளையும், பழங்காலத்தில் பழக்கத்திலிருந்த தமிழ் வார்த்தைகளுக்குப் பாடல்களின்மூலம் புத்துயிர் கொடுத்துக்கொண்டிருப்பவருமான மதன் கார்க்கி இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியிருக்கிறார்.

வெகுதூரத்தில் இருப்பதாக நினைக்கும் காதலனொருவன், திடீர் சர்ப்ரைஸாக எதிரே வந்து காதலியுடன் இரவு முழுவதும் சுற்றித்திரிவதாக இந்தப்பாடலின் சூழல் விளக்கப்பட்டிருக்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி நடித்திருக்கும் இந்தப்பாடல் காதலர் தினப் பரிசாக வெளியாகியிருக்கிறது. அப்படி தூரமாக இருந்தாலும், காதலியைப் பார்க்க நேரில் வரமுடியாத காதலனைப் பற்றி நினைத்துப்பார்த்தீர்களா பாஸ். இந்தப்பாடலைப் பார்த்துவிட்டு அப்படி சிக்கப்போகும் காதலன்களின் எண்ணிக்கை எத்தனை என்று ஆய்வு நடத்தவேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*