By February 15, 20180 CommentsReport

வர்மா கதாநாயகி யார்?..!!

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இன்னும் கதாநாயகி முடிவாகவில்லை.

விக்ரம் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சேது. பாலா இயக்குநராக அறிமுகமான அந்தப் படம் இருவருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படத்தையும் பாலாவே இயக்குகிறார். படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி இரண்டு மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், பாலா தற்போது நாச்சியார் படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்திவருகிறார்.

படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள், படம் பற்றிய தகவல்களை ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளனர். “அர்ஜுன் ரெட்டியில் நடித்திருந்த ஷாலினி பாண்டே, ஸ்ரியா ஷர்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் பாலா அறிமுக நடிகையை எதிர்பார்க்கிறார். நாச்சியார் படம் வெளியானதும் முழுவீச்சில் இந்தப் படத்தில் அவர் கவனம் செலுத்துவார். இந்த மாத இறுதிக்குள் கதாநாயகி யார் என்பது உறுதியாகிவிடும். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்” என்று பதிவு செய்துள்ளனர்.

ராஜு முருகன் வசனம் எழுதுவது குறித்துக் கேட்டபோது, “ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் பாலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என பாலா ராஜு முருகனிடம் கூறியிருந்தார். இந்தப் படம் ஆரம்பித்ததும் வசனம் எழுத அவரை அணுகினார். அவரும் உடனே சம்மதித்து வசனம் எழுதிவருகிறார்” என்று கூறியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*