By February 16, 20180 CommentsReport

காதலர் தினம் கொண்டாடிய நயன்..!!

காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) காதலர்கள் பலரும் பல விதமாகக் கொண்டாடினார்கள். நடிகை நயன்தாராவும் தனது காதலருடன் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலர் தினத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு தங்களது காதல் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். நயன்தாராவும் தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்ததைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தங்கள் கொண்டாட்டத்தைத் தெரியப்படுத்தும் விதமாக நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை இன்று (பிப்ரவரி 15) வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரொமாண்டிக் லுக்கில் இருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*