By February 16, 20180 CommentsReport

நல்ல கதைகளை எதிர்பார்க்கும் நானி..!!

இயக்குநர் ராஜமௌலியின் ஃபேவரிட் ஹீரோவான நானி, நல்ல கதைகளுடன் யார் வந்தாலும் தான் தயாரிக்க ரெடியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறியப்பட்டவர் தெலுங்கு நடிகர் நானி. தெலுங்கு சினிமாவுலகில் முன்னணி இளம் நடிகர்களுள் ஒருவரான இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துவருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்புப் பணியையும் மேற்கொண்டுவரும் அவர் ‘AWE’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தனது ரசிகர்களுடன் ஃபேஸ்புக் லைவ்வில் கலந்துரையாடிய நானி, அந்த உரையாடலில் ரசிகர் ஒருவரின் தயாரிப்பு சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில், “எனது தயாரிப்பில் உருவாகும் படங்களில் நான் நடிக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளேன். திறமையுடன் வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே நான் படங்கள் தயாரிக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம். நான் தயாரிக்க ரெடியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘AWE’ படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரெஜினாவின் தோற்றம், டீசர், ட்ரெய்லர் முதலான இந்தப் படத்தின் அறிவிப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் படம் நாளை (பிப்ரவரி 16) வெளியாகவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*