By February 16, 20180 CommentsReport

பூஜையுடன் தொடங்கிய ‘அசுரகுரு..!!

விக்ரம் பிரபு நடிக்கும் அசுரகுரு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (பிப்ரவரி 15) துவங்கியது.

‘நெருப்புடா’ படத்தையடுத்து விக்ரம் பிரபு நடித்திருக்கும் பக்கா படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து துப்பாக்கி முனை படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இந்நிலையில் மற்றொரு படத்திற்கும் தயாராகியிருக்கிறார் விக்ரம் பிரபு.

‘அஞ்சனவித்தை’ என்ற குறும்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றவரும், இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவருமான ராஜ்தீபின் ‘அசுரகுரு’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியது. இதில் விக்ரம் பிரபு, இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படத்தில் முனீஸ்காந்த், ஜெகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவிருக்கிறது. கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*