By February 16, 20180 CommentsReport

நாச்சியார்: கோவிலோ குப்பைமேடோ ஒண்ணுதான்..!!

பாலாவின் நாச்சியார் பட டீசரில் இடம்பெற்ற வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்க, அப்படத்தின் ப்ரொமோவில் இடம்பெற்றிருக்கும் வசனமும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் நாச்சியார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்த படத்தை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கியிருக்கிறார் பாலா.

நாச்சியார் படத்தின் டீசர் வெளியானபோது பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. காரணம் அதில் ஜோதிகா பேசிய ஒற்றை வசனம்தான். பாலா படங்களில் இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் ஜோதிகா பேசியதால் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. படத்தின் இசை வெளியீட்டுத் தேதிக்கான அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் படம் நாளை (பிப்ரவரி 16) வெளிவரவிருக்கும் சூழலில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அனைத்து மதங்களின் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் அதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் மதங்களை விமர்சிக்கும் விதமாக இருக்கின்றன. இறுதியில் ஜோதிகா, “கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்” என்று பேசுகிறார்.

அனைத்து மதங்களையும் விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது எத்தகைய பாதிப்பைத் தர இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படாமல் இருந்தால் சரி. இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*