By February 16, 20180 CommentsReport

தமிழில் அறிமுகமாகும் தனுஷா..!!

கோகோ மாகோ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை தனுஷா.

அருண் காந்த் இயக்கத்தில் ரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கிரி மற்றும் அருண்காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கோகோ மாகோ’. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாரின் உறவினரான ராம்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘இந்த நிலை மாறும்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக தனுஷா அறிமுகமாகிறார். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ், சந்தான பாரதி, டெல்லி கணேஷ், பாண்டு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நேற்று (பிப்ரவரி 14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் ராம்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு வினோத் ஷ்ரிதர் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*