By February 16, 20180 CommentsReport

சந்தானத்தையும் விடாத ஆசை..!!

சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கதாநாயகனாக வலம்வரத் தொடங்கிய சந்தானத்துக்கு அடுத்தடுத்து படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சேதுராமனின் சக்க போடு போடு ராஜா படத்துக்குப் பிறகு ஆனந்த் பால்கியின் சர்வர் சுந்தரம், மணிகண்டனின் ஓடி ஓடி உழைக்கணும், செல்வராகவனின் மன்னவன் வந்தானடி, எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

இந்த நிலையில், தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை ராம்பாலா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹாரர் காமெடி ஜானரில் வெளியான இதன் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை சந்தானம் தனது ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதில் நடிக்கவுள்ள கதாநாயகி, இதர நடிகர்கள், பணியாற்றவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*