By February 18, 20180 CommentsReport

மீண்டும் சர்ச்சைக் கதையில் தீபிகா..!!

ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் படமான தீபிகா படுகோனின் பத்மாவத் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் வன்முறையையும் சந்தித்துத் திரையரங்குகளில் ஓடிவருகிறது. படம் வெளியாவதற்கு முன் இருந்த எதிர்ப்பு குறைந்து படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துவருகிறது. தற்போது அவர் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார்.

‘ஓம் காரா’, ‘ஹைதர்’, ‘ரங்கூன்’ போன்ற படங்களை இயக்கிய விஷால் பரத்வாஜ் இயக்கும் புதிய படம் ராணி. தீபிகா படுகோன் இர்பான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ள இந்தப் படம் எண்பதுகளில் மும்பையில் மாஃபியா குயின் எனச் சொல்லப்பட்ட லேடி கேங்க்ஸ்டர் சப்னா தீதியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகவிருக்கிறது.

சப்னா தீதியாக தீபிகா படுகோனும், அவரது கணவர் காளியா கதாபாத்திரத்தில் இர்ஃபான் கானும் நடிக்கிறார்கள். ‘பிக்கு’ படத்திற்குப் பிறகு தீபிகாவும் இர்ஃபானும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

தீபிகா தற்போது இப்படத்துக்கான முன்தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*