By February 18, 20180 CommentsReport

2017 அதிகம் விரும்பப்பட்ட பெண்: ஓவியா..!!

2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியலில் ஓவியா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஒப்பனைகளுடன் இயக்குநர் எழுதிக்கொடுத்த வசனம் மூலம் நடித்து ரசிகர்களைப் பெற்றதைவிட தனது இயல்பு மாறாமல் வந்துபோன பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா எண்ணற்ற ரசிகர்களையும் பெயரையும் பெற்றார். அதன் மூலம் வாய்ப்புகள் நிறைய வந்தாலும் எனக்குப் பிடித்தால்தான் நடிப்பேன் எனத் தொடர்ந்து தனது இயல்பை மாற்றிக்கொள்ளாமல் வலம்வரும் அவருக்கு ரசிகர்கள் தங்கள் மனதில் நிரந்தர இடம் கொடுத்துவிட்டனர்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கடந்த ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியலில் ஓவியா முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் நயன்தாராவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. நடிகை அமலா பால் 28ஆவது இடத்தைப் பெற்றார்.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் பட்டியலில் நான் முதலிடத்தில் வருவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. நான் கனவுலகில் இருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் வெற்றியாளராக இருப்பதால் எனக்கு இத்தனை ரசிகர்கள் கிடைக்கவில்லை. அவர்களது அன்பாலே நான் வெற்றியாளராக இருக்கிறேன்” என ஓவியா தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*