By February 18, 20180 CommentsReport

மணி ரத்னம் படத்தில் மலையாள நடிகர்..!!

முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கவுள்ள மணி ரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் மற்றொரு பிரபலமாக மலையாள நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார்.

மணி ரத்னம் வெளியிட்ட முதலாவது அறிவிப்பில் பகத் பாசில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் ஒப்பந்தமாகவில்லை. அவருக்குப் பதிலாக அருண் விஜய் ஒப்பந்தமானார். இந்நிலையில் இந்தப் படத்தில் மற்றொரு பிரபலமாக சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் அறிமுகமாகி அப்பாணி ரவி கேரக்டர் மூலம் கவனம் பெற்ற சரத்குமார் நடிக்கிறார்.

சரத்குமார் மோகன்லால் நடித்த வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலிலும் நடித்தவர். இந்தப் பாடல் ஹிட்டனாதால் இவருக்குத் தமிழிலும் வாய்ப்புகள் குவிகின்றன. சண்டைக் கோழி 2 படத்தில் முக்கிய கேரக்டரிலும், ராஜுமுருகன் கதையில் உருவாகும் படத்தில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராகவும் நடித்துவருகிறார். தற்போது பம்பர் வாய்ப்பாக மணி ரத்னத்தின் செக்க சிவந்த வானம் திரைப்படம் கிடைத்திருக்கிறது. இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சரத்.


Post a Comment

CAPTCHA
Refresh

*