By February 18, 20180 CommentsReport

அனுஷ்காவின் குரல் ரகசியம்?..!!

நடிகர்கள், நடிகைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் இயல்பில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. சில அதிர்ச்சியைக் கொடுத்தாலும், சில ஆச்சர்யங்களும் அவர்களிடத்தில் நிறைந்திருக்கும். அப்படியொரு அம்சம் கொண்டவர் நடிகை அனுஷ்கா. அவர் நடிக்கும் கேரக்டர்களுக்கும், அவரது குரலுக்கும் தொடர்பு இருக்காது. மிகவும் மெல்லிய குரலைக் கொண்டதால்தான், அவர் ஏற்கும் கனமான கேரக்டர்களுக்கு வேறொருவரை வைத்து டப்பிங் பேசவைப்பதாகக் கூறியிருக்கிறார்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகின்றன. கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த இவர் இதுவரை ஒரு கன்னடப் படத்திலும் நடித்ததில்லை. தெலுங்கு, தமிழ் என 47 படங்கள் நடித்திருக்கும் அனுஷ்கா, சரளமாக தெலுங்கு பேசுவார். ஓரளவு தமிழ் பேசத் தெரிந்த இவர் தான் நடித்த எந்த படத்துக்கும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியது இல்லை.

இது குறித்து “நான் நடிக்க வந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரங்களுக்கு எனது சொந்தக் குரலில் ‘டப்பிங்’ பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எனது தோற்றத்தை ஒப்பிடும்போது, நான் பேசுவது சின்னப் பெண் பேசுவது போல இருக்கும். என் வீட்டில் இருப்பவர்கள்கூட என்னைக் குழந்தை போல் பேசுகிறேன் என்று கிண்டல் செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் “நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்குக் குழந்தைத்தனமாகப் பேசினால் காமெடியாக இருக்கும். அது சரிப்பட்டு வராது. எனவேதான், எனக்குச் சொந்தக் குரலில் பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலும், டப்பிங் பேச வேண்டும் என்று இதுவரை டைரக்டர்களிடம் கேட்டது இல்லை. எனவே எனக்கு ஏற்றாற்போல் உள்ள பெண் குரலைத் தேடிப் பேச வைக்கிறார்கள்” என்று விளக்கமளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*