By February 18, 20180 CommentsReport

காளி: நூறாய் யுகம் நூறாய்..!! (வீடியோ)

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் காளி படத்தின் ‘நூறாய் யுகம் நூறாய்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்ட கிருத்திகா உதயநிதி, விஜய் ஆண்டனியை கதாநாயகனாகக் கொண்டு காளி படத்தை உருவாக்கி வருகிறார். இதில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் காதல் டூயட் பாடலான நூறாய் யுகம் நூறாய் பாடலை வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு அருண் பாரதி வரிகளைத் தந்துள்ளார். ஹேமா சந்திரா, சங்கீதா ராஜேஸ்வரன் இருவரும் பாடியுள்ளனர். நூறாய் யுகம் நூறாய் எனத் தொடங்கும் இந்தப் பாடலில்,

இதயத்தின் மையப் பகுதியில்

இருக்கை விரித்து அமர்ந்தாய்

உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்

ஒருத்தி வடிவில் கொடுத்தாய்

என்பன போன்று இடம்பெற்றிருக்கும் பல வரிகள் காதல் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றன. விஜய் ஆண்டனிக்கும் அம்ரிதாவுக்குமான காதலை வெளிப்படுத்தும் இந்த பாடல் காதலர்களின் முணுமுணுப்பில் இடம்பெறும் பாடலாக அமையும் எனலாம்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*