By February 19, 20180 CommentsReport

படமாகும் ஸ்ரீதேவி கதை?..!!

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ரசிகர் மன்றத்தினர் படமாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்தி படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகள் ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை பெங்களூருவைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் உருவாக்க உள்ளனர். இதற்காக நடிகை ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஐந்து பாகங்களாக எடுக்க உள்ளதாகவும், தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள் மற்றும் குடும்பம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், மம்மூட்டி, அம்பரீஷ் உள்ளிட்ட அனைத்து மொழி நடிகர்களும் ஸ்ரீதேவி பற்றி பாராட்டும் கருத்துக்கள் இந்தப் படத்தில் இடம்பெற உள்ளதாகவும், ஸ்ரீதேவி படங்களில் பணியாற்றிய இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் இதில் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*