By February 19, 20180 CommentsReport

தயாரிப்பாளருடன் மோதல்: சந்தீப் கிஷன் விளக்கம்..!!

தெலுங்கு பட டப்பிங் விஷயத்தில் தயாரிப்பாளருடன் நடிகர் சந்தீப் கிஷனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த படம் ‘மாயவன்’. தமிழில் வெளியான இப்படம் தெலுங்கில் ‘புராஜெக்ட் இசட்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் சுந்தீப் கிஷனுக்கும், தயாரிப்பாளர் எஸ்.கே.பஷீத் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

சந்தீப் கிஷன் குரலுக்கு பதிலாக வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்திருக்கிறார் பஷீத். “டப்பிங் பேச அழைத்தபோது சந்தீப் வரமறுத்துவிட்டார். சந்தீஷ் கிஷனை வைத்து படம் செய்வதற்குப் பதில் நாயை வைத்து படம் தயாரிப்பேன். பட புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வர சந்தீப் மறுத்துவிட்டார்” என்று எஸ்.கே.பஷீத் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக பதில் சொல்லாமல் மௌனம் காத்து வந்த சந்தீப் கிஷன், “என் படத்துக்கு நான்தான் டப்பிங் பேச வேண்டும் என்ற விதிமுறை இல்லாவிட்டாலும் என்னுடைய பணியை நான் நல்லமுறையில் நிறைவேற்றியிருக்கிறேன். இப்படத்தை பஷீத் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கு ரூ. 40 லட்சம் தான் கொடுத்தார். மீதமுள்ள ரூ.1 கோடியை அவர் தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். வேறு ஒருவர் என் பாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருப்பதைக்கூட விட்டுவிடலாம். ஆனால் படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் டிராக் கூட இல்லை. பஷீத்தி்ன் நடவடிக்கை சரியில்லை” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*