By February 19, 20180 CommentsReport

பணங்காட்டு நரியாக மாறிய சினேகன்..!!

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சினிமாவுலகில் பிஸியாகி வருகின்றனர். ஓவியா, ஆரவ், ஹரீஷ், ரைஸா, சுஜா வருணீ உள்ளிட்ட பலரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சினேகனுக்கு மட்டும் என்னவாகிவிட்டது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது `எவனும் புத்தனில்லை’ படத்தில் 200 நடனக் கலைஞர்களுடன் சினேகன் நடனமாடி ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்தார். இந்த நிலையில் அவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படம் பணங்காட்டு நரி என்ற பெயரில் உருவாகிவிருக்கிறது. இது குறித்து சினேகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இயக்குநர் EV.கணேஷ் பாபு இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய படம் பணங்காட்டு நரி. இதன் அறிமுக விழா இன்று (பிப்ரவரி 17) மலேசிய மண்ணில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நடிகை ஓவியா, சுஜா, ஜூலி மற்றும் மலேசிய பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிட்டிருப்பதுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் பிஸியான வேளையில் தற்போது சினேகனும் பிஸியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*