By February 19, 20180 CommentsReport

காதல் இளவரசரை ஏங்கவைத்த ப்ரியா..!!

ப்ரியா வாரியருக்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் திரைத் துறை பிரபலங்கள் பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் அவரோடு இணைந்து நடிக்க முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தினம் ஒரு பிரபலத்தை ப்ரியா வாரியர் முந்திக்கொண்டு செல்கிறார். பல ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருப்பவர்களை இன்னும் ஒரு படம்கூட வெளியாகாத நடிகை ஒருவர் திகைக்க வைப்பது சாதாரண விஷயமில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் அவரது கண் அசைவுக்கு மயங்கியுள்ளனர். பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என புகழப்படும் ரிஷி கபூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

ரிஷி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ப்ரியா வாரியர், இந்தப் பெண்ணுக்குச் சிறந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கிறேன். நன்றாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கிறார். என் இனிய ப்ரியா… உன் வயதையொத்தவர்களுக்கு நீ கடும் போட்டியாக இருக்கப் போகிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். சிறந்ததே கிடைக்கட்டும். நான் நடித்துக்கொண்டிருக்கும்போது நீ வரவில்லையே?” என ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.

ரிஷி கபூரின் இந்தப் பாராட்டுக்கு ப்ரியா வாரியர் நன்றி தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*