By February 19, 20180 CommentsReport

பயத்தை விட்டொழியுங்கள்: அனுஷ்கா..!!

‘நடிகைகள் தங்களுக்குள் இருக்கும் பயத்தை விட்டொழிக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தத் தடையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

அருந்ததி, பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாகமதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்தது. தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் அனுஷ்கா தனது சினிமா அனுபவம் குறித்து ஃபர்ஸ்ட் ஸ்பாட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நடிகர், நடிகைகள் பலருக்கு படப்பிடிப்பு அரங்கினுள் வரும்போது காட்சிகளில் எப்படி நடிக்கப் போகிறோமோ என்ற பயம் இருக்கும். எனக்கும் ஆரம்பத்தில் அப்படி இருந்தது. பின்னர் பயம் குறைந்தது. இப்போது சுத்தமாக பயம் இல்லை. ஆனால் இப்போது தைரியமாக இருக்கிறேன். தவறு செய்தால்தான் சரியானது எது என்பது தெரிய வரும். எனவே தவறுகளுக்காக வருத்தப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

“நடிகைகள் தங்களுக்குள் இருக்கும் பயத்தை விட்டொழிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தப் பயம் தடையாக இருக்கிறது. எந்தத் தொழிலாக இருந்தாலும் வேலையைச் செய்து கொண்டேதான் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் தவறு நடந்தால் திருத்திக்கொள்ளலாம். அந்தத் தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தில் கூட நமக்கு அனுபவங்கள் கிடைக்கும். நான் தவறுகளுக்காக எப்போதுமே பயப்படுவது இல்லை. அதனால் தான் நல்ல கதைகளைத் தேடித் தேடி நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*