By February 20, 20180 CommentsReport

காமெடி ஜானரில் ‘பதுங்கி பாயனும் தல..!!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது ‘பதுங்கி பாயனும் தல’ திரைப்படம்.

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும் இந்தப் படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் எனப் பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இதன் இயக்குநர் பேசும்போது, “இந்தப் படத்தின் செட்யூல் 53 நாட்கள். ஆனால் 45 நாட்களில் படத்தை முடித்துள்ளோம். இந்தப் படத்தில் சிம்பு மாதிரி தரையில் படுத்து டான்ஸ் ஆடுவதைப் போல ஒரு காட்சியை படமாக்க நினைத்தேன். அதனால் தயங்கியபடி போய் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த ராகுல் தாத்தாவிடம் சொன்னேன். யோசிக்காம நாளைக்கு அசத்திடுறேன் என்று சொன்னார். அதன் பிறகு இரவு முழுவதும் தரையில் படுத்தபடி பயிற்சி எடுத்து, மறுநாள் சிங்கிள் டேக்கில் அசத்தி மொத்த யூனிட்டிடமும் கைதட்டு வாங்கினார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “குழந்தைகள் ,குடும்பத்தோடு அமர்ந்து வயிறு குலுங்கச் சிரித்து ரசிக்கும் படியாக இப்படம் உருவாகியிருக்கிறது. தணிக்கைக்குழு எந்த வெட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் வழங்கிப் பாராட்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியான நிலையில் இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவும், வல்லவன் சந்திரசேகர் இசையமைத்துமிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*