By February 20, 20180 CommentsReport

பிரம்மாண்ட செட்டில் உருவாகும் சூர்யா படம்…!!

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட்டில் அம்பாசமுத்திரம் நகரையே உருவாக்கியிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் பின்பகுதியில் 5 கோடி அளவில் செட் அமைத்து படப்பிடிப்பை மேற்கொண்டனர். அதே போல சூர்யா, செல்வராகவன் முதன்முறையாக இணைந்திருக்கும் படத்திற்காக 3 கோடி மதிப்பில் சென்னையில் பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டிருக்கிறது. அம்பாசமுத்திரம் பின்னணியில் பல காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் அதற்காக சென்னையில் அம்பாசமுத்திரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக செட் அமைத்துள்ளனர்.

இது குறித்து படக்குழுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில். “கலை இயக்குநர் ஆர்.கே.விஜயமுருகன் கைவண்ணத்தில் அம்பாசமுத்திரத்தின் வீடுகள், கோவில், அதன் பசுமையைக் காட்டுவதற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டுள்ளது . 220 பேர் பணிபுரிந்து 23 நாட்களில் இந்த செட்டை அமைத்துள்ளனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய். இங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதில் அதிகப்படியான நடிகர்கள் நடிக்கவுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.

சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பில் இருவரும் கலந்துகொண்டு நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*