By February 20, 20180 CommentsReport

வித்யாபாலன் வேடத்தில் ஜோதிகா?..!!

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த தும்ஹாரி சுலு என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் 36 வயதினிலே. இந்தப் படத்தை தொடர்ந்து குடும்பம் மற்றும் திரைப்படம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா மகளிர் மட்டும், நாச்சியார் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த தும்ஹாரி சுலு என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தும்ஹாரி சுலு படமானது ஒரு நடுத்தர வயது பெண் வானொலியில் ஆர்.ஜே வாக பணியில் சேர்ந்தவுடன் அவளுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாக வைத்து வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வித்யாபாலன் சுலோச்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இந்தப் படத்தை ஏற்கனவே ஜோதிகாவை வைத்து மொழி படத்தை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஏசியண்ட் நியூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் ராதா மோகன் இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தபோது ஜோதிகா இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணி அவரை அணுகியதாகவும், கதையை கேட்டவுடன் இந்தப் படத்தில் ஜோதிகாவும் நடிக்க ஒப்புக்கொண்டார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*