By February 20, 20180 CommentsReport

உடல்நலக் குறைவால் விஷால் மருத்துவமனையில் அனுமதி..!!

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் விஷால்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என இரண்டு பொறுப்புகளைக் கவனித்து வருவதோடு சினிமாவையும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் விஷால். இவரும் சமந்தாவும் ஜோடி சேர்ந்திருக்கும் இரும்புத்திரை படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சண்டக்கோழி படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர். ஆகையால் இதன் இறுதிக்கட்ட பணிகளை முடிக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார் விஷால். பல்வேறு பணிச்சுமைகளை கடந்தும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வந்த சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் விஷாலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*