By February 20, 20180 CommentsReport

அப்பாவின் படத்தில் வரலட்சுமி..!!

முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகள் தங்களது அப்பாக்களோடு திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் நடிகை வரலட்சுமியும் இணைந்திருக்கிறார்.

கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன், அர்ஜுனின் வாரிசான ஐஸ்வர்யா இப்படி திரைப் பிரபலங்களின் வாரிசுகள் பலர் தங்களுடைய அப்பாவோடு நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் வரலட்சுமியும் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாரின் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்தான அறிவிப்பை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன், “முதன்முறையாக என்னுடைய அப்பாவின் படத்தில் நான் நடிக்கவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அப்பாவுக்கும், இயக்குநர் வெங்கடேஷ் சார் உள்ளிட்ட படக் குழுவினருக்கும் மிகுந்த நன்றி” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.

அரசியலில் ஒருபக்கம் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் மறுபக்கம் சினிமாவில் தொடர்ச்சியாகப் பயணித்துவரும் சரத்குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஏ.வெங்கடேஷுடன் இணைந்திருக்கிறார். பாம்பன் என்ற பெயரில் உருவாகிவரும் இதற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின் நாவலை மையமாகக்கொண்டு இது உருவாகி வருகிறது.

எஸ்.எஸ்.கே புரொடக்ஷன் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். ‘நீயா’ படத்தில் வரும் பழிவாங்கும் பாம்பு போன்று இதுவும் பழிவாங்கும் பாம்பு கதை. பழிவாங்கும் பாம்பனாக சரத்குமார் நடிக்கிறார். இவர் தவிர ஒரு புதுமுகமும் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*