By February 21, 20180 CommentsReport

மீண்டும் இரு மலையாள புதுவரவுகள்..!!

‘அருப்புக்கோட்டையில் அஜித்’ படத்தின் மூலம் மலையாள நடிகை அதிதி ரவி தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற படம் ‘கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன்’. நாதிர்ஷா இயக்கிய இந்தப் படத்தை அவரே தமிழில் ‘அருப்புக்கோட்டையில் அஜித்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா, தனுஷ் இயக்கி நடித்த ப.பாண்டி படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் தீனா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் வெளியான ‘அலமாரா’ படம் மூலம் கவனம் பெற்ற அதிதி ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆனந்தம் படத்தில் நடித்திருந்த சித்தி மகாஜன்கிட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் பேசிய அதிதி, “தமிழில் கதாநாயகியாக அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன் படம் பார்த்தேன். அப்போதே இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என கனவு கண்டேன். தற்போது அந்த கனவு நனவாகி வருகிறது” என்று கூறியுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*