By February 21, 20180 CommentsReport

பாலிவுட்டில் அறிமுகமாகும் ரெஜினா..!!

Regina Cassandra Latest HD Photos from Soukyam Telugu Movie New Images, Gallery

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ரெஜினா பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

ரெஜினா நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர்.சந்திரமௌலி என அடுத்தடுத்து பல படங்கள் உருவாகிவருகின்றன. ரெஜினா மாறுபட்ட வேடத்தில் நடித்து தற்போது வெளியாகியுள்ள அத் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது. இந்நிலையில், ரெஜினா பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏக் லடுகி கோ தேகா தூ ஐசா லகா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஷெல்லி சோப்ரா தார் இயக்கிவருகிறார்.

இதில் சோனம் கபூர், ராஜ்குமார் ராவ், அனில் கபூர், ஜுகி சாவ்லா ஆகியோர் நடிக்கின்றனர். வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் – ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் துவங்கிய படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. படத்தை இந்த ஆண்டு (2018) அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் குடும்பப் பாங்கான வேடங்களைத் தேர்வு செய்யும் ரெஜினா, தெலுங்கில் கிளாமர் வேடம் ஏற்கவும் தயங்குவதில்லை. தற்போது பாலிவுட்டில் அவரது அறிமுகம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*