By February 21, 20180 CommentsReport

பெண் வேடத்தில் பாகமதி ஹீரோ..!!

சாணக்கிய தந்திரம் படத்திற்காக பெண் தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகர் உன்னி முகுந்தன்.

அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பாகமதி. இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்தவர் உன்னி முகுந்தன். இவர் தற்போது தெலுங்கில் சாணக்கிய தந்திரம் என்ற படத்தில் கரிஷ்மா என்ற கதாபாத்திரத்தில் பெண் தோற்றத்தில் நடித்துள்ளார். இவரின் பெண் தோற்றம் அடையாளம் காணும் வகையில் இல்லாமல் தத்ரூபமாக உள்ளது.

அந்தப் புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட உன்னி முகுந்தன், “இவள்தான் எனது அடுத்த பாதி.., இவளைக் காண நான் பல கஷ்டங்களைக் கடந்துள்ளேன். ஆனால் தற்போது நான் அவளைப் பார்த்துவிட்டேன். இந்தப் பயணத்தில் இருந்த கஷ்டங்கள் இப்போது சரி என்று தோன்றுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*