By February 21, 20180 CommentsReport

விஜயகாந்த் படத் தலைப்பில் பிரபுதேவா..!!

தமிழில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக விஜயகாந்த் படத் தலைப்பில் நடிக்கவிருக்கிறார்.

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல திறமைகளைக் கொண்ட பிரபுதேவா கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிவருகிறார். பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர், தற்போது கோலிவுட்டில் முழுக் கவனம் செலுத்தி பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் மெர்குரி திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதனையடுத்து சார்லி சாப்ளின் 2, யங்மங்சங், லட்சுமி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் சாம் இயக்கவுள்ளார். உமேஷ் சுதன் சுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும், சதிஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர். இந்தப் படத்திற்கு விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் படமான ஊமை விழிகள் படத்தின் தலைப்பையே இதற்கும் வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த ஊமைவிழிகள் திரைப்படம் 1986ஆம் ஆண்டு வெளியானது. ஆபாவணன் திரைக்கதையில் அரவிந்த் ராஜ் இயக்கியிருந்தார். த்ரில்லர் பாணியிலான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*