By February 21, 20180 CommentsReport

தயாரிப்பாளராகும் சிவகார்த்தி..!!

அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள புதிய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது சீமராஜா படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கிவருகிறார். இதனைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் மற்றும் பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள புதிய படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார். இது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படமாகும். இந்தப் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் நேற்று (பிப்ரவரி 19) சென்னையில் நடைபெற்றது. இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்திலும் நடிகர் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் நண்பரான அருண்ராஜா காமராஜ் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*