By February 21, 20180 CommentsReport

இசையைத் தேடி ஒரு பயணம்: ஹாரிஸ்..!!

கார்த்தி நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள புதிய படத்தை அறிமுக இயக்குநர் ராஜா ரவிசங்கர் இயக்குகிறார். பயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் புதிய வழிமுறையை உபயோகித்துள்ளார்.

கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. 20 வயது இளைஞராக கார்த்தி இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

படத்திற்கான சில டியூன்களைப் போட்டுள்ள ஹாரிஸ் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாடலை மெருகேற்றிவருகிறார்.

இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு பயணக் கதை. கார்த்தி 20 வயது இளைஞராகத் தோற்றமளிக்க கடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தக் கதையைக் கேட்டவுடன் ஹாரிஸ் மிகவும் உற்சாகமாகிவிட்டார். கதை நடைபெறும் இடங்களையும் அங்கு வசிக்கும் மனிதர்களையும் சந்தித்துள்ளார். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டுள்ளார். இன்னும் இரு வாரங்களில் பாடல்களுக்கான இசையமைப்பு முடிந்துவிடும்” என்று கூறியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*