By February 21, 20180 CommentsReport

மீண்டும் மங்காத்தா கூட்டணி?..!!

மங்காத்தா படத்தை அடுத்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அர்ஜுன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவா-அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் படத்திற்கு முதன் முறையாக டி.இமான் இசையமைக்கிறார். விவேகம் படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித்தும் அர்ஜுனும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகையால் அதே கூட்டணியை விஸ்வாசம் படத்தில் அமைக்க சிவா முயற்சித்துவருவதாக கூறப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*