By February 22, 20180 CommentsReport

உறுதியான தனுஷ்-கார்த்திக் கூட்டணி..!!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்பாராஜ் – தனுஷ் கூட்டணி இணையவுள்ளதாக ஒரு வருடத்திற்கு முன்னரே தகவல் வெளியாகி உறுதியாகாமல் போனது. தற்போது இந்தக் கூட்டணி இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து திரைத் துறையில் நுழைந்த இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் தனுஷ் நடித்திருந்தார். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. அதே போல் கார்த்திக் சுப்பாராஜோடும் இணைந்து நடிப்பதாகக் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. தேனாண்டாள் பிலிம்ஸ் அந்தப் படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். கார்த்திக் சுப்பாராஜ் பிரபுதேவாவைக் கதாநாயகனாகக் கொண்டு உருவாக்கிவரும் மெர்குரி படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் தனுஷைக் கதாநாயகனாகக் கொண்டு படம் உருவாக்குவது தற்போது உறுதியாகிறது. விக்ரம் வேதா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*