By February 22, 20180 CommentsReport

பாலிவுட்டில் பாலியல் கொடுமை: ரைமா சென்..!!

மற்ற துறைகளைப் போலவே பாலியல் கொடுமை திரைத் துறையிலும் உள்ளது எனவும் ஆனால் தனக்கு அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் பாலிவுட் நடிகை ரைமா சென் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டின் மேல் தொடர்ச்சியாக எழுந்த பல குற்றச்சாட்டுகள் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து மீ டூ (#MeToo) போன்ற இயக்கங்கள் உருவாகி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன. ஹாலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட், கோலிவுட்டிலும் பாலியல் கொடுமைகள் பற்றிய பேச்சுகள் வெளிவரத் தொடங்கின.

தற்போது பாலிவுட் நடிகை ரைமா சென் இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்துள்ள அவரது பேட்டியில், “மற்ற துறைகளைப் போலவே இங்கும் பாலியல் கொடுமைகள் உள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. வெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை. திறமை இருந்தால் இதிலிருந்து எளிதாகத் தப்பிவிடலாம்” என்று கூறியுள்ளார்.

ரைமா சென் அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை நடிகை. இவரது தாய் மூன் மூன் சென், பாட்டி சுசித்ரா சென் ஆகியோரும் நடிகைகளே. திரைத் துறைப் பின்புலத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு இந்த விஷயத்தில் பாதுகாப்பு இருப்பதாக ரைமா சென் கூறியுள்ளார். “திரையுலகில் புதிதாக வரும் நடிகைகள் இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். திறமை இருந்தால் இயக்குநரோடு படுக்கையைப் பகிரும் அவசியம் ஏற்படாது” என்றும் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*