By February 22, 20180 CommentsReport

கிரிக்கெட் வீராங்கனையான ஐஸ்வர்யா..!!

பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் முதல் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்தப் படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ள ஐஸ்வர்யாவின் பேட்டியில், “இது மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம். சிறிய நகரத்தில் கிரிக்கெட் கனவுகளுடன் வளரும் பெண்ணாக நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“இந்த விளையாட்டைப் பற்றிய அடிப்படை தெரியாமல் இதை விளையாட முடியாது. நான் இதற்காக ஏற்கனவே பயிற்சி எடுத்தேன். நேர்மையாகக் கூற வேண்டுமானால் இந்தப் படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் எந்த மகளிர் கிரிக்கெட் போட்டியையும் பார்த்ததில்லை. இப்போது அதைப் பார்க்கத் தொடங்கியுள்ளேன். அவர்களது உடல்மொழியையும் ஈடுபாட்டையும் மிகவும் விரும்புகிறேன். கிரிக்கெட் வீராங்கனைகளைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இந்தப் படத்தில் நடிக்கிறேன். எனது மனதுக்கு நெருக்கமாக உள்ள இந்தக் கதையில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துவருகிறேன். பெருவாரியான இந்திய ரசிகர்களை இந்த படம் சென்றடையும்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*