By February 22, 20180 CommentsReport

காமெடி காத்தாடியில் தன்ஷிகா.!!!

நடிகை தன்ஷிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காத்தாடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் தன்ஷிகா, கபாலி படத்தின் மூலம் பெரிதளவில் கவனம் பெற்றார். விழித்திரு படத்தை அடுத்து காத்தாடி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவிஷேக், ஜான் விஜய், ,சம்பத், டேனியல், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குலேபகாவலி படத்தைத் தந்த எஸ்.கல்யாண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் நேற்று மாலை (பிப்ரவரி 20) வெளியானது.

குலேபகாவலி படத்தைப் போன்றே இதையும் காமெடி ஜானரில் உருவாக்கியிருக்கிறார் கல்யாண். இதில் தன்ஷிகா போலீஸ் வேடத்திலும் அவிஷேக், டேனியல் இருவரும் திருடு, கடத்தல் முதலான குற்றச் சம்பவங்களைச் செய்பவர்களாகவும் நடித்திருக்கிறார்கள். ஒரு குழந்தையை அவிஷேக்கும் டேனியலும் கடத்தி பணம் கேட்டு மிரட்ட அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் போலீஸான தன்ஷிகா ஒருபக்கம் களமிறங்குகிறார். அதே குழந்தையைக் கைப்பற்றும் முனைப்பில் சம்பத், ஜான் விஜய் உள்ளிட்ட டீம்கள் களமிறங்குகின்றன. இத்தகைய பின்னணியைக் காமெடி ஜானரில் சொல்லியிருக்கிறார் என ட்ரெய்லரைப் பார்க்கையில் யூகம் எழுகிறது.

இந்த ட்ரெய்லர் இடம்பெற்றிருக்கும் முதல் காட்சியில் மொட்டை ராஜேந்திரனுடன் மறுமுனையில் போனில் பேசுபவர், ‘என்னண்ணா… மீட்டிங்கா’ எனப் பேச, அதற்கு மறுமுனையில் மொட்ட ராஜேந்திரன், “மீட்டிங்கில்லாம் இல்லப்பா… ரெண்டு பசங்க கதை சொல்ல வந்திருக்காங்க… அதக் கேட்டிட்டு இருந்தேன்… இங்கிலீஷ் படமில்ல… தமிழ்ப் படம் தான்… அடுத்த படத்தில நான்தான் ஹீரோவா பண்ணப் போறேன்… இந்தியாவே மெர்சலாக போகுது… அந்த கத்ரீனா கைஃபை ஹீரோயினா போட்டிருங்கப்பா…” எனப் பேசிக்கொண்டிருக்க டேனியில் ஜாடியில் இருக்கும் ஊறுகாயை எடுத்து திருட்டுத்தனமாய் சுவைத்து விட்டு வைத்து விடுகிறார். பேசி முடித்துவிட்டு அதே ஜாடிக்குள் காறி எச்சிலை உமிழ்கிறார் ராஜேந்திரன். ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் இந்தக் காமெடி காட்சியே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

பிப்ரவரி 23ஆம் தேதி வெளிவரவிருக்கும் இந்த காமெடி காத்தாடி தன்ஷிகாவுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*