By February 22, 20180 CommentsReport

ஜி.விக்கு ஜோடியாகும் அமைரா..!!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்றவர். சந்தானம் கதாநாயகனாக நடித்த ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் அமைரா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முடிவடைந்த பின்னரும் எதிர்பாராத சில காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ரொமான்டிக் காமெடி வகையில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அமைரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய வேடத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கிறார். விஷன் ஐ மீடியாஸ் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இந்திய – சீன நடிகர்கள் இணைந்து நடித்த குங்பூ யோகா படத்தில் அமைரா, ஜாக்கி சானுடன் இணைந்து நடித்து கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*