By February 23, 20180 CommentsReport

முதல் பாகத்தை முடித்த வெற்றி மாறன்..!!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வடசென்னை. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு 2011ஆம் ஆண்டே வெளியானாலும், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பமானதும் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் ஒவ்வொருவராக இணைந்தனர். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

1980களின் காலப் பின்னணியில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியானபோது படப்பிடிப்பு நிறைவடைந்ததா என்கிற கேள்வியில் ஊடகங்கள் பலவாறு செய்திகள் வெளியிட்டன. இந்த நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “வடசென்னை ஒன்றாம் பகுதி நிறைவடைந்துள்ளது… வெல்வோம்… நன்றி வெற்றி மாறன் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் கதை, நீளம் என்பதால் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் சமுத்திரக்கனியின் அறிவிப்பு அமைந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*