By February 23, 20180 CommentsReport

அதர்வாவை இயக்கும் இளம் இயக்குநர்..!!

முதல் படத்திலேயே வித்தியாசமான க்ரைம் திரில்லர் கதையுடன் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீ கனேஷ் அடுத்ததாக அதர்வாவைக் கதாநாயகனாகக் கொண்டு படம் இயக்கவுள்ளார்.

அறிமுக நடிகர் வெற்றி நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. வெற்றியுடன், அபர்ணா முரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஸ்ரீ கணேஷ், இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஸ்ரீ கணேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார்.

தற்போது, இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் படத்தைப் போலவே இதுவும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி, இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*