By February 23, 20180 CommentsReport

மராத்தி திரையுலகில் தனுஷ்..!!

கோலிவுட், பாலிவுட் என நடித்துவரும் தனுஷ் ஹாலிவுட்டிலும் தடம்பதித்துவிட்டார். தற்போது முதன்முறையாக மராத்தி திரையுலகிலும் நுழைந்துள்ளார்.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ’மாரி 2′ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பாடகராகவும் வலம்வரும் தனுஷ் இதுவரை இளையராஜா இசையில் பாடியதில்லை. அது ஒரு கனா காலம், ஷமிதாப் என இளையராஜா இசையமைப்பில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அவரது இசையில் பாடும் வாய்ப்பு அமையவில்லை. சமீபத்தில் ட்விட்டரில் அவரது ரசிகர் “நீங்க எப்போ இளையராஜா இசையில் பாடுவீங்க?” என தனுஷிடம் கேட்க, “அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா” என பதிலளித்திருந்தார். தற்போது அந்த வாய்ப்பு தனுஷுக்குக் கிடைத்துள்ளது.

இளையராஜா இசையமைக்கும் மராத்தி படமான ஃப்லிக்கரில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் தனுஷ். அமோல் படவ் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் மராத்தி திரையுலகிலும் களமிறங்கியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*