By February 24, 20180 CommentsReport

துணிச்சலை சொல்லும் செய்..!!

நகுல் நடிப்பில் உருவாகியுள்ள செய் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நகுல் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ‘பிரம்மா.காம்’ படம் வெளியானது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.விஜயகுமார் இயக்க நகுலுக்கு ஜோடியாக நடிகை அஸ்னா சவேரி நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்த்த இந்த படம் வெற்றியைத் தரவில்லை. இதனையடுத்து ராஜ்பாபுவுடன் இணைந்து செய் படத்தில் நடித்திருக்கிறார் நகுல். இதில் ஆஞ்சல், சந்திரிகா ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லரை விஜய் சேதுபதி நேற்று (பிப்ரவரி 22) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காதல், காமெடி, ஆக்‌ஷன் என உருவாகியுள்ள இப்படத்தில் நகுல் சரவெடி சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரெய்லரில் நடிகனாக ஆசைப்படும் நகுல் எதிர்பாராத விதமாக ஆபத்தில் மாட்டிக்கொள்வது போலக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. “செய்யுறது நல்ல விஷயம்னா அதைச் செய், யாருக்கும் பயப்படாமல் துணிஞ்சு செய்” என படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தை ட்ரிப்பி டர்ட்டூல்ஸ் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் மண்ணு மற்றும் உமேஷ் தயாரித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ், நாசர், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*