By February 24, 20180 CommentsReport

உண்மைக் காதல் பேசும் ‘அபியும் அனுவும்’..!!

மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு நடிகை பியா பாஜ்பாய் நடித்திருக்கும் அபியும் அனுவும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பியா பாஜ்பாய், பின்னர் ஏகன், கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களுக்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அபியும் அனுவும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

உண்மைக் காதலை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருப்பதால் கதையின் தன்மை அறிந்து பியாவும், டோவினோ தாமஸும் லிப்லாக் காட்சியிலும் நடித்திருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பியாவின் அழகு, கேரக்டர் முதலானவை டோவினோவை கவர அவர் மீது காதல் வயப்பட்டு காதலை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் பியா, டோவினோவின் காதலை ஏற்றுக்கொள்ள இருவரும் நெருக்கமான காதலர்களாகி விடுகிறார்கள். அதே சமயம் இருவரும் ஏதோ காரணத்தினால் பிரிகின்றனர். இப்படிக் காதல் வயப்பட்ட இருவரின் சந்தோஷம், துக்கம் போன்றவற்றை அழுத்தமாகச் சொல்லும் படமாக இது உருவாகியிருக்குமெனெ ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளால் அறிய முடிகிறது.

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமைக்குரிய பி.ஆர்.விஜயலட்சுமி இதனை இயக்கியுள்ளார். தரண்குமார் இசையமைத்துள்ளார். மார்ச் 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் அபியும் அனுவும் காதலர்களின் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*