By February 24, 20180 CommentsReport

மீண்டும் தொடங்கிய சாமி ஸ்கொயர்..!!

விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதை அடுத்து படத்தின் டைட்டில் லோகோ போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

ஹரி-விக்ரம் கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. இதற்கிடையே விக்ரமின் தந்தை இறந்துவிட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு தற்போது மீண்டும் நெல்லையில் தொடங்கி உள்ளது.

நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த தியேட்டரின் பெயரை பி.பி. தியேட்டர் எனப் பெயர் மாற்றி, அங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் திரையிடப்படுவது போல் பேனர்களும் கட்டியுள்ளனர். அந்த படத்தை பார்க்க மக்கள், டிக்கெட் கவுண்டரில் முண்டியடிப்பது போலவும், அரசியல்வாதிகள் வரிசையாக நிற்பது போல் துணை நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவருடைய மகனாக வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அவர் தொடர்புடைய காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் நெல்லையில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையே படத்தின் தயாரிப்பு நிறுவனமான தமீன்ஸ் பிலிம்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், “சிறிய இடைவேளைக்குப் பிறகு சாமி ஸ்கொயரின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவங்கியுள்ளது. மற்ற அறிவிப்புகள் விரைவில்” என்று குறிப்பிட்டதுடன் படத்தின் டைட்டில் லோகோ போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*